அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: சுஷ்மா ஸ்வராஜ்
அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் . ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி ஸ்ரீனிவாஸ் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாஸ் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான அலோக் மடசனி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர். கைதான ஆடம் புரின்டன்(51) முன்னாள் கடற்படை வீரர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீனிவாசின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஸ்ரீனிவாசனின் உடலை ஐதராபத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி