அமெரிக்கா : இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டது இனவெறி தொடர்புடையதா என விசாரணை
அமெரிக்க மாகாணம் கான்சாஸில் மது அருந்தகத்தில் இந்தியர் ஒருவர் மீது நடத்திய தாக்குதல், இனவெறி தொடர்புடையதா என்று காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க மாகாணம் கான்சாஸில் மது அருந்தகத்தில் இந்தியர் ஒருவர் மீது நடத்திய தாக்குதல், இனவெறி தொடர்புடையதா என்று காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதன்கிழமையன்று இரவு ஒளத்தேயில் (Olathe) நெரிசல் மிகுந்த விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர், அதில் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, தாக்குதல்தாரி இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளை கூறியதாக மது அருந்தக பணியாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் காயமடைந்தார்.
51 வயதான ஆடம் புரின்டோன், இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க புலனாய்வு முகமை FBI, இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.
31 வயதான ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்டலா என்பவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது நண்பர் அலோக் மாடசாணி உடல்நிலை தேறிவருகிறார்.
இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். நன்றி:தி இந்து தமிழ்