எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!
பாலசோர்: எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ராணுவ வலிமையை பன்மடங்கு பெருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் பல்வேறு ஆயுதங்களை தயாரித்து, சோதனை நடத்தி வெற்றி கண்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தாக்கும் திறனுள்ள சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதில், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இந்த சோதனை வெற்றிபெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இஸ்ரோ நிறுவனம் 104 செயற்கை கோள்களை தங்கிச் செல்லும் ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.