Breaking News
கோடைக்கு மருந்தாகும் நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து விடும். செரிமான மண்டலத்துக்கு மிகவும் நல்லது.

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்,

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து இந்த ஜூஸ் அருந்தலாம். சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு மிகவும் நல்லது.

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் நெல்லிக்காய் சாறுக்கு உண்டு. குழந்தைகளுக்குத் தேன் சேர்த்துக் கொடுத்தால் அவர்களது நினைவுத் திறன் அதிகரிக்கும்.

சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதிலும் நெல்லி ஜூஸுக்கு இணை நெல்லிக்காய் ஜூஸ் மட்டும்தான். அந்தளவுக்கு சருமத்தை பளப்பளப்பாகும். இளமைப் பொலிவுடன் இருக்க தினமும் ஒரு தம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கவேண்டும். முகப்பரு நெல்லிக்காய் ஜூஸை அடிக்கடி குடித்தால் நீங்கும்

கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது. நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.சுவையும் சத்தும் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பது மிகவும். நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 6
எலுமிச்சை பழம் – 1,
தேன் – ஒரு தேக்கரணடி
இஞ்சி – ஒரு துண்டு

நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கவும். அதன் பின் அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

எலுமிச்சைச்சாறு, தேன், இஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

ஒரு தம்ளரை எடுத்து கொண்டு, ஜூஸை நன்றாக வடிகட்டி அதனுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.