Breaking News
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் டெக்னிக்கல் உதவியாளர், அதிகாரி பணி

மத்திய அரசு நிறுவனமான தேசிய விண்வெளித் துறை ஆய்வகங்களில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னிக்கல் அதிகாரி மற்றும் முதுநிலை டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2017 தேதி: 24.02.2017
மொத்த காலியிடங்கள்: 28
பணியிடம்: கர்நாடகா
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Assistant – 25
தகுதி: பொறியியல் துறையில் மின் மற்றும் தொலைத்தொடர்பு அல்லது மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200/4,600

பணி: Technical Officer – 01
தகுதி: பொறியியல் துறையில் ஏரோநட்டிக்கல், விண்வெளி பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200/4,600

பணி: Senior Technical Officer – 02
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nal.res.in/pdf/All%20India%20advt%20%20group%20III%20%204%20of%202016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.