கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலில் 5 பேர் பலி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த இரு மாதங்களில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “கடந்த இரு மாதங்களில் பெங்களூருவில் 3 பேரும், மைசூருவில் 2 பேரும் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். அண்மைக்காலமாக மேற்கொண்ட ஆய்வுகளில் கர்நாடகாவில் 344 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை களில் சிறப்பு அறைகள் திறக்கப் பட்டுள்ளன. பெங்களூருவில் மட்டும் 6 மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அறைகள் ஒதுக் கப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சியும், மாநில சுகாதாரத் துறையும் முடுக்கிவிட்டுள்ளன.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆபத்தான நிலையில் இருந்து தப்பிக்க முடியும். இதற்கு போதிய மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அச்சம் வேண்டாம்
இந்த நோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. தற்போதுள்ள இடைக்கால நிவாரண மருந்தைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான மருந் துகள் இருப்பில் உள்ளதால், நோயாளிகள் அச்சப்பட தேவை யில்லை” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
பலியானோர் எண்ணிக்கை
கடந்த 2009-ம் ஆண்டு பெங் களூருவில் பன்றிக் காய்ச்சலால் 135 பேர் உயிரிழந்தனர். 2010- ம் ஆண்டில் 120 பேரும், 2011-ம் ஆண்டில் 16 பேரும், 2012-ம் ஆண் டில் 48 பேரும், 2013-ம் ஆண்டில் 19 பேரும், 2014-ம் ஆண்டில் 34 பேரும், 2015-ம் ஆண்டில் 94 பேரும், 2016-ம் ஆண்டில் 5 பேரும் பலியாகியுள்ளனர். நிகழாண்டில் கடந்த 2 மாதங்களில் 5 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.