சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பெண் மாயம்: போலீஸில் சகோதரி புகார்
சசிகலா புஷ்பா எம்பி மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம் பெண்ணைக் காணவில்லை என்று, அவரது சகோதரி திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த திசையன் விளை அருகே உள்ள ஆனைகுடி யைச் சேர்ந்த பணிப்பெண்கள் 2பேர் கடந்த 8.8.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட் னீஸிடம் புகார் மனு அளித்தனர். சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்தபோது தாங்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகாரில் கூறியிருந்தனர்.
இதன்பேரில், சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகர், மகன் பிரதீப்ராஜா ஆகி யோர் மீது, தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய் தனர். இதனிடையே, தாங்கள் கொடுத்த புகார் பொய்யானது என்றும், அரசியல் லாபத்துக்காக ஒருசில தவறான நபர்களின் தூண்டுதலால் அந்த புகாரை கொடுத்ததாகவும், தற்போது அந்த புகாரையும், வழக்கையும் வாபஸ் பெறுவதாகவும் தூத்துக் குடி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளருக்கும், புதுக் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மனு அனுப்பினர். இந்நிலையில், அந்த பணிப் பெண்களில் ஒருவரை காண வில்லை என்று, திசையன்விளை காவல் நிலையத்தில் அவரது சகோதரி நேற்று புகார் செய்துள்ளார்.
அரசியல் லாபத்துக்காக ஒருசில தவறான நபர்களின் தூண்டுதலால் புகார் கொடுத்ததாக மனு அனுப்பினர்.