ஏற்றுமதியில் சீனாவை மிஞ்சும் இந்தியா
உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா தனது போட்டி நாடான சீனாவை மிஞ்சி விட்டது என பிரபல கப்பல் நிறுவனமான டாம்கோ அறிவித்துள்ளது
ஏற்றுமதி:
இந்தியாவும் சீனாவும் பல்வேறு உலக நாடுகளுக்கு தங்களது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை போட்டி போட்டு ஏற்றுமதி செய்து வருகின்றன. டாம்கோ என்ற பிரபல கப்பல் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2013 முதல் 2016 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வருடத்திற்கு 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரம் சீனாவின் ஏற்றுமதி 5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அதிகரிக்க காரணம்
இது குறித்து டாம்கோ கப்பல் நிறுவன தலைவர் சேஜிங் கூறியதாவது: இந்தியாவிலிருந்து வீட்டு அலங்கார பொருட்கள், ஜவுளிகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றன. சீனாவில் இந்தியாவை காட்டிலும் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. சீனாவை காட்டிலும் தரமான பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.