தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழக மாவட் டங்களில் லேசான மழை தொடர வாய்ப்புள்ளது. வடமாவட் டங்களை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார்.