தனித்தனியே நிர்வாகிகள் பட்டியல்: கணவன் – மனைவி மோதலால் தீபா பேரவையில் குழப்பம்
தீபாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோத லால் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையில் குழப்பம் ஏற்பட்டுள் ளது. இதனால் தீபாவின் ஆதர வாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த 24-ம் தேதி ‘எம்ஜிஆர்-அம்மா-தீபா- பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு கொடியையும் அறிமுகம் செய்தார். சில தினங்களுக்கு பிறகு பேரவையின் தற்காலிக செய லாளர், தலைவர் பதவிகளுக்கு தனது நண்பர்களான ஏ.வி.ராஜா மற்றும் சரண்யா ஆகிய இரு வரை தீபா நியமித்ததாக தகவல் வெளியானது. இதற்கு தொண் டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களை சந்தித்த தீபா, “முழு மையான நிர்வாகிகள் பட்டியலை பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடு வேன்” என்று அறிவித்தார்.
ஆனால், அன்றைய தினமும் நிர்வாகிகள் பட்டியல் வெளி யிடப்படவில்லை. இதனால், கடந்த 2 மாதங்களாக தீபாவின் முடிவுக்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்த னர். அவர்களில் பலர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு செல்லத் தொடங்கினர். இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல நிர்வாகிகள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தை சென்னையில் கடந்த 2-ம் தேதி இரவு தீபா நடத்தினார். இந்த கூட்டத்துக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
கணவர் அதிருப்தி
தீபா அரசியலில் ஈடுபடப்போவ தாக அறிவித்த நாள் முதல் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வரும் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகளை தீபாவின் கணவர் மாதவன் சந்தித்து பேசி வந்தார். பேரவையின் பெயர், கொடியை அறிமுகம் செய்யும் போதும் இருவரும் கூட்டாகவே அறிமுகம் செய்தனர். இருப்பினும், பொறுப்பாளர்கள் நியமனத்தில் தனது கருத்து கேட்கப்படாததால் மாதவன் அதிருப்தியடைந்தார்.
நிர்வாகிகள் நியமனம் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரி வித்த மாதவன், “பொறுப் பாளர்கள் நியமனம் குறித்து எனக்கு தெரியாது. பேரவை தொடங்கு வதற்காக ஆரம்பம் முதல் உழைத் தவர்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம். 32 மாவட்டங்களின் பொறுப் பாளர்கள் நியமனத்தில் எனக்கு உடன்பாடில்லை. தற்போது பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளவர்களை நான் சந்தித் தில்லை” என்றார்.
இவ்வாறு தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உச்சத்தை அடைந்ததாலும், நிர்வாகிகள் நியமன பிரச்சினை காரணமாகவும் தீபாவின் வீட்டு முன் கூடும் தொண்டர்கள் கூட்டமும் குறைந்து போனது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தீபாவின் கணவர் மாதவன், நேற்று இரவு தீபாவை போலவே 32 மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரித்து தனியாக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில், தீபா வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் இடம்பெற வில்லை. இதனால் தொண்டர்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து மாதவனின் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, “தீபா வெளியிட்டுள்ள பட்டியலில் பேரவைக்காக உழைத்தவர்கள் இடம்பெறவில்லை. எனவேதான் பேரவைக்காக உழைத்தவர்களை கணக்கில் கொண்டு நிர்வாகிகளை பட்டியலை மாதவன் வெளி யிட்டுள்ளார்” என்றனர்.