நாவூறும் நெல்லைச் சுவை: புளியஞ்சாதம்
என்னென்ன தேவை?
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
உளுந்து,
கடலைப் பருப்பு – தலா 2 ஸ்பூன்
வேர்க்கடலை – 1 கைப்பிடி
மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்தெடுங்கள். ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத் தாளியுங்கள். அதனுடன் உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் சேருங்கள். பிறகு இரண்டு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் வேர்க்கடலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். வறுத்து வைத்திருக்கும் மிளகாய்ப் பொடியைச் சேருங் கள். கெட்டியானதும் இறக்கி, சாதத்துடன் கலந்தால் சுவையான புளியஞ்சாதம் தயார்.
வெந்தயம், எள், கொத்தமல்லி விதை மூன்றையும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் அள வுக்கு எடுத்து எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து, சாதத்துடன் கலந்தால் கூடுதல் வாசனையுடனும் சுவையுடனும் இருக்கும்.