பட்டொளி வீசி பறக்குது தேசியகொடி ; இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம்
அமிர்தசரஸ்; இந்திய , பாகிஸ்தான் எல்லையில் நாட்டின் மிக அதி உயர கம்பத்தில் ( 360 அடி) தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பம் பஞ்சாப் மாநில அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 55 டன் எடை கொண்ட இதன் மொத்த செலவு ரூ.3.50 கோடி ஆகும். இதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 293 அடி உயரக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டது.
அச்சத்தில் பாகிஸ்தான்:
இந்திய எல்லையில் தேசிய கொடி இந்த அளவிற்கு உயரமாக பறக்க விடப்பட்டிருப்பதற்கு பாகிஸ்தான் தனது அதிருப்தியை, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் உளவு சாதனம் ஏதும் இருக்குமோ என்றும் சந்தேகத்தில் பாகிஸ்தான் ஆழ்ந்துள்ளது.