வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க இலங்கை அரசு மறுப்பு
‘இலங்கையில், இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்கும் குழுவில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும்’ என்ற, ஐ.நா.,வின் கோரிக்கையை ஏற்க, இலங்கை மறுத்து விட்டது.
‘மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதில் இலங்கை தாமதம் செய்கிறது. விசாரணைக்காக சிறப்பு கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இந்த கோர்ட்டில், உள்ளூர் மற்றும் சர்வ தேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்’ என, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூறியிருந்தது.
இது தொடர்பாக இலங்கை பிரதமர், ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது: சிறப்பு கோர்ட் அமைக்க வேண்டும் என்ற, ஐ.நா.,வின் கோரிக்கை சாத்தியமில்லாதது. இலங்கையின் நீதித்துறை மீது, சர்வ தேச அளவில் நம்பிக்கையில்லாத நேரத்தில், இந்த கோரிக்கை வந்துள்ளது. அதிபர் சிறிசேன தலைமையில், விசாரணை குழு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு கோர்ட் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.