லஞ்சம் கொடுப்பதில் இந்தியா டாப்
லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ஆசிய பசுபிக் நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் அரசு பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில், சர்வதேச அமைப்பு இந்த ஆய்வை எடுத்தது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவு: 16 நாடுகளில் வசிக்கும் மக்களில் நான்கு பேரில் ஒருவர் அல்லது 90 கோடி பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்த நாடுகளில் வசிக்கும் மக்களில் 22 ஆயிரம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்த நாடுகளில் லஞ்சம் கொடுப்பது குறைந்துள்ளது என 22 சதவீதம் பேரும், அதிகரித்துள்ளது என 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் லஞ்சம் கொடுப்பது மோசமான நிலையில் உள்ளதாக 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா முதலிடம்
லஞ்சம் கொடுப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 69 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்தில் லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ளதாக 40 சதவீதம் பேரும், லஞ்சத்திற்கு எதிரான போரில், தனி நபர்களுக்கும் பொறுப்பு உள்ளது என 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்களில் அடையாள அட்டை பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் லஞ்சம் கொடுப்பவர்களில் 73 சதவீதம் பேர் ஏழை மக்கள். அதேபோல், பாகிஸ்தானில், 64 சதவீதம் பேரும், தாய்லாந்தில் 46 சதவீதம் பேரும் ஏழை மக்கள் என தெரியவந்துள்ளது.
இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் வியாட்நாம் உள்ளது. 69 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளனர். அங்கு வசிக்கும் மக்களில், மூன்றில் 2 பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் 26 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
குறைந்தளவு:
லஞ்சம் கொடுப்பதில் ஜப்பான் கடைசி இடத்தில் உள்ளது. 0.2 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் 3 சதவீதம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.