கும்ப்ளேவுக்கு பதவி உயர்வு அளிக்க முடிவு: இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் திராவிட்?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பயிற்சியாளராக பணி யாற்றி வரும் அனில் கும்ப்ளே வுக்கு பதவி உயர்வு அளிக்கும் விதமாக இந்திய அணியின் இயக்குநராக அவர் பணியமர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் இயக்குநராக செயல்பட்ட ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதன் பின்னர் அந்த இடம் நிரப்பப்படவில்லை. அந்த இடத்துக்கு கும்ப்ளேவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இது நிகழும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது இந்திய ஏ அணிக்கு பயிற்சியாள ருமாக இருந்துவரும் ராகுல் திராவிட், சீனியர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட லாம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் குழு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படு கிறது. இந்த குழுவினர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் உள்ளது போன்று பயிற்சியாளர் அதிகாரத் துக்கான கட்டமைப்பை இந்திய கிரிக்கெட்டிலும் ஏற்படுத்த முயற்சிகள் செய்து வருவதாகவும் தெரிகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான் அனில் கும்ப்ளே கடைசியாக பயிற்சியாளராக பணி யாற்றும் தொடராக இருக்கும். மேலும் அவர் தனது புதிய பணியை ஏப்ரல் 14-ம் தேதி முதல் தொடங் கக்கூடும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில், பிசிசிஐயை நிர்வகிக்கும் குழுவை அனில் கும்ப்ளே சந்தித்து பேசினார். அப்போது இந்த குழுவினர் ஏற்கெனவே கேட்டுக்கொண்ட தற்கிணங்க சீனியர் அணி, இந்திய ஏ அணி ஜூனியர் அணி மற்றும் மகளிர் அணி ஆகியவை தொடர் பான விரிவான அறிக்கையை கும்ப்ளே வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.
அப்போது நிர்வாகிகள் குழு வானது, கும்ப்ளேவிடம் இயக்குநர் பதவி குறித்து பேசியதாக தெரி கிறது. மேலும் இதை ஏற்றுக் கொள்ள அவருக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நிர்வாகிகள் குழுவானது தற்போது இயங்கி வரும் பிசிசிஐ ஆலோசனை கமிட்டியை கலைக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த ஆலோசனை குழுவில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவை கலைத்துவிட்டு இதில் உள்ள 3 பேரில் ஒருவரை இந்திய அணியின் மேலாளராக நியமிக்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.
தொடர்ந்து நியூஸிலாந்து அணியை 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கிலும், வங்கதேச அணியை 1-0 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தியது. தொடர் வெற்றிகளால் இந்திய அணி ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது