மாரடைப்பால் உயிர் பிரியும்போது 30 பயணிகளைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்
கர்நாடகாவில் தும்கூர் அருகே பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார். தனது வாழ்வின் இறுதி நிமிடங்களிலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றினார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிராவில் இருந்து நெலமங்களா நோக்கி தனியார் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டிச் சென்ற நாக்ராஜுக்கு (56) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் பயணிகள் அனைவரும் அலறினர்.
பயணிகளின் கூக்குரலை கேட்ட நாக்ராஜ் உடனடியாக பேருந்தின் பிரேக்கை மிதித்து சாலையோர தடுப்பில் மோதி, பேருந்தை நிறுத் தினார். இதனால் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணி கள் தப்பினர். அதே நேரத்தில் மாரடைப்பு காரணமாக பேருந்தி லேயே நாக்ராஜ் உயிரிழந்தார்.
தனது வாழ்வின் இறுதி நிமிடங்களிலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட நாக்ராஜின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக சிரா நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.