4 செயற்கை கோள்களை செலுத்த இஸ்ரோ அடுத்த முயற்சி
இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.கோல்கட்டாவில், ‘இஸ்ரோ’ என்கிற இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் இயக்குனர், டி.ஜி.கே.மூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது: இன்னும், இரண்டு மாதங்களில், ஜி.எஸ்.எல்.வி., மார்க் – 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
விரைவில், இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். சார்க் நாடுகள் பயன் பெறும் வகையில், தனியாக ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார். அதை ஏற்று, செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு, அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது .
சூரியன் மற்றும் சர்வதேச தட்பவெப்ப மாற்றத்தை ஆய்வு செய்ய, தனி செயற்கைக்கோள் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ‘ஆதித்யா – எல்1’ என பெயரிடப்படும். இந்த செயற்கைக்கோள், 400 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆய்வுக்காக, இஸ்ரோ பயன்படுத்தும் சாதனங்களில், 90 சதவீதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இவ்வாறு அவர் கூறினார்.