Breaking News
நாட்டு நலனுக்காக டிஜிட்டலுக்கு மாறும் சுப்ரீம் கோர்ட்

இன்னும் 200 நாட்களில் சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் அறிவித்துள்ளார்.

டிஜிட்டலுக்கு மாறும் சுப்ரீம் கோர்ட் :

தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் சுப்ரீம் கோர்ட் காகித பயன்பாடு இல்லாததாக மாற்றப்பட உள்ளது. வழக்குகள் அனைத்தும் இனி காகிதத்தில் இல்லாமல் டிஜிட்டல் முறையிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளன. விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் ஐகோர்ட்டுகளில் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை எலக்ட்ரானிக் முறையிலேயே பெற உள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நீதிபதிகள் சந்திரசவுத், சஞ்சய் கே.கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்சும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மரங்களை காக்க திட்டம் :

சுப்ரீம் கோர்ட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 70,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது தவிர வழக்கு தொடர்பாக விசாரணை நீதிமன்றங்கள், ஐகோர்ட்டுகள் நூற்றுக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கின்றன. மேலும் மேல்முறையீடுகள் உள்ளிட்டவைகள் 200 பக்கங்கள் கொண்டதாக தாக்கல் செய்யப்படுகின்றன. கிட்டதட்ட 70 லட்சம் வெள்ளை தாள்கள் இவற்றிற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டே காகிதம் இல்லாத, டிஜிட்டல் முறைக்கு மாற சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் வரையிலான தாள்கள் மிச்சப்படுத்தப்பட உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.