உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை: மூன்றாவது இடத்தில் இந்தியா
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு உள்நாட்டு விமான பயணிகளின் எண் ணிக்கை 10 கோடியாக இருந்தது.
முதல் இடத்தில் அமெரிக்கா வில் 71.9 கோடி நபர்கள் விமா னத்தில் பயணம் செய்திருக் கின்றனர். அடுத்து சீனாவில் 43.6 கோடி நபர்கள் பயணம் செய்திருப்பதாக சிஏபிஏ என்னும் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கின்றனர்.
இந்தியாவின் உள்நாட்டு விமான சந்தை கடந்த இரு ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 4-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு வரும் என சிஏபிஏ இந்தியாவின் கபில் கவுல் தெரிவித்தார். அதே சமயத்தில் மூன்றாவது இடத்திலே நீண்ட காலம் இருக்க வேண்டி இருக்கும். முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவைப் பின்னுக்கு தள்ளுவது என்பது இப்போதைக்கு முடியாது என்றும் அவர் கூறினார்.