உலகின் மிகப்பெரிய காலடித்தடம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!!
ஆஸ்திரேலியாவில் மிகவும் பழமையான வகை டைனோசரின் காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள கிம்பர்லி மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் பிரிவு மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது புதிய வகை டைனோசர் காலடி தடங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனை ஆராய்ச்சி செய்த போது, அவை 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.
மேலும் உலகின் மிகப்பெரிய காலடி தடம் கொண்ட டைனோசர்கள் அங்கு வாழ்த்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.