இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – சூர்யா தரப்பு மறுப்பு
சூர்யா இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டார் என்று வெளியாகிவுள்ள செய்திக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சூர்யா, இஸ்லாம் மதத்தை தழுவிட்டார் என்று சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் தர்கா ஒன்றில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு சூர்யா வழிபாடு செய்வது என 3 நிமிடங்கள் ஒடக்கூடிய அளவில் இருந்தது.
இந்த வீடியோ பதிவு குறித்து சூர்யா தரப்பு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக சூர்யா தரப்பு, “சூர்யா இஸ்லாம் மதத்தை தழுவிட்டார் என்று வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. மசூதியில் சூர்யா இருக்கும் வீடியோவால் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
கடப்பாவில் ‘சிங்கம் 2’ படப்பிடிப்புக்கு இடையே அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் அங்குள்ள மசூதிக்கு சென்றுவரும்படி சொன்னார். அங்கு சென்றபோது சூர்யா தொழுகையில் ஈடுபட்டது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ பதிவு மிகவும் பழமையானது. சூர்யா இஸ்லாம் மதத்தை தழுவவில்லை” என்று தெரிவித்துள்ளார்கள்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.