துவரம் பருப்பு, கோதுமைக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு
கோதுமை மற்றும் துவரம்பருப்புக்கு அடிப்படை சுங்க வரியாக தலா 10 சதவீதம் வரி விதித்து, அதை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு:
கோதுமைக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை கடந்த டிச., 8ம் தேதி மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்நிலையில் கோதுமைக்கும், துவரம்பருப்புக்கும் அடிப்படை சுங்க வரியாக தலா 10 சதவீதம் வரி விதித்து, அதை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பார்லியில் நேற்று அறிவித்தார்.
விவசாயிகளுக்கு உதவி:
ம.பி., குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கோதுமை தற்போது சந்தைக்கு வர துவங்கியுள்ளது. துவரையின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசின் இந்த வரிவிதிப்பு, உள்நாட்டில் மொத்த விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி, விவசாயிகளுக்கு உதவிகரமாக அமையும்.