Breaking News
நெடுஞ்சாலை மைல்கல்லில் இந்தி மொழி ஆக்கிரமிப்பு

நெடுஞ்சாலையில் உள்ள மைல்கல்களில் இந்தி மொழி ஆக்கிரமித்துள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஊர் பெயர்களை அழித்து விட்டு, முதலில் இந்தியிலும், இரண்டாவதாக தமிழிலும் ஊர் பெயர்களை எழுதி வருகின்றனர். புதிதாக எழுதப்பட்ட மைல்கற்களில் ஆங்கிலம் இல்லாததால் தமிழ் மற்றும் இந்தி தெரியாத வெளிமாநில பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறும் போது மைல்கல்களில் தமிழுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.