உலகம் முழுவதும் ஏப்ரல் 28-ம் தேதி: 7,500 திரையரங்குகளில் பாகுபலி-2 வெளியீடு
பாகுபலி திரைப்படத்தின் 2-ம் பாகம் உலகம் முழுவதும் சுமார் 7,500 திரையரங்குகளில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளதாக தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத் தில் பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, பாகுபலி படத்தின் 2-ம் பாகம் சுமார் ரூ.120 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ரோஹினி உட்பட பலர் நடித் துள்ளனர்.
இதற்கான பணிகள் முழுவதும் முடிந்த நிலையில், சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளி யிடப்பட்டது. இதற்கு ரசிகர் களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்த திரைப் படத்தை தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை அதிக அளவிலான தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் 7,500 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதில் நம் நாட்டில் மட்டும் 6,500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முதல் பாகத்திலேயே அதிக வசூலை அள்ளிய இத்திரைப் படம், இரண்டாவது பாகத்திலும் அதிக வசூலை அள்ளிக் குவிக்கும் என தெலுங்கு திரையுலகம் எதிர்பார்க்கிறது.