வால்பாறையில் பசுமை சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி
வால்பாறை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, சிங்கவால் குரங்கு, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள், மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. பொள்ளாச்சி வன கோட்டத்தில் டாப்சிலிப், குரங்கு அருவி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடல் மட்டத்திற்கு மேல் 600 மீட்டருக்குள் உள்ள வனப்பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகள் வறட்சியின் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக உள்ளது. வால்பாறை பகுதி பசுமையாக உள்ளது சுற்றுலாபயணிகளை மகிழ்சியடைய செய்துள்ளது. அருவிகள், மற்றும் காட்சிமுனைகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இருப்பினும் மலை சாலைகளில் வாகனங்கள் நிறுத்தவும், உணவு சாப்பிடவும், புகைபிடிக்கவும் வழக்கமான தடை கடைப்பிடிக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.