இந்துஸ்தானி இசை கற்கலாம் வாங்க!
சிறந்த இசையமைப்பாளரும் பத்மவிபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் கங்குபாய் ஹங்கலின் பெயரில் அறக்கட்டளை (Dr. Gangubai Hangal GurukulTrust) ஒன்றை நிறுவிய கர்நாடக அரசு, அதன்மூலம் தார்வாட் மாவட்டம் ஹூப்ளியில் இந்துஸ்தானி இசைக்கான சிறப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இம்மையத்தில் இந்துஸ்தானி இசைப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சேர்க்கைத் தகுதி: இந்துஸ்தானி இசையில் அடிப்படை அறிவு தேவை. 1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 2. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 3. 15 – 35 வயதுக்குக்குள்(1-7-2017படி) இருக்க வேண்டும். 4.ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் (மணமாகாதவர் மட்டும்)
விண்ணப்பம் : ரெஸ்யூம் மற்றும் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் தயாரித்து,அத்துடன் கல்வித்தகுதி நகல்கள், அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழ்,இந்துஸ்தானி இசையில் அனுபவம் பெற்றவர் என்பதை உறுதிப்படுத்த குரல் மற்றும் இசையினைக் குறுந்தகட்டில் பதிவு செய்து “Administrative Officer, Dr.GangubaiHangal Gurukul Trust (R), Unkal, Hubli 580032, District: Dharwad, KarnatakaState” எனும் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் ரெஸ்யூமை gangubaihangalgurukul@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தர வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:15-4-2017.
மாணவர் தேர்வு: விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுஅவர்களுக்கு நேர்க்காணல் மற்றும் குரல் தேர்வு நடத்தப்பட்டுப் பயிற்சி மாணவர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பயிற்சி பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் குரு சீடர் மரபு வழியில் இந்துஸ்தானிய இசை குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சியில் இந்துஸ்தானிய இசை வரலாறு, பிற மரபு வழி இசைகள் குறித்த பாடங்களோடு, இந்துஸ்தானிய இசை பிரபலங்களின் சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியுடைய மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். மாணவர்களின் ஆர்வம், திறன் பொறுத்து இப்பயிற்சிக்காலம் 2அல்லது 4 ஆண்டுகளாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் குருகுலத்தில் தங்குமிடம், உணவு மற்றும் சீருடைகள் இலவசம். மேலும் தகவல்களுக்கு http://drgangubaihangalgurukul.com/ +91 – 9980426669