பச்சைப் பட்டாணி காஸ்தா பூரி
என்னென்ன தேவை?
மேல் மாவிற்கு:
கோதுமை மாவு,
மைதா மாவு – தலா 1 கப்,
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கு,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.
பூரணத்திற்கு:
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 1 கப்,
இடித்த பச்சைமிளகாய்,
இஞ்சி – தலா 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சோம்பு தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
மாங்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – சிறிது.
எப்படிச் செய்வது?
மேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பூரணத்திற்கு கொடுத்ததை வேகவைத்த பட்டாணியை சிறிது மசித்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து கலந்து பூரணமாக வைக்கவும். பூரி மாவை எடுத்து மேலும் 5 நிமிடத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு மாதிரி செய்து ஒவ்வொரு உருண்டையின் உள்ளேயும் பூரணத்தை ஒரு டேபிள்ஸ்பூன் வைத்து மூடி, மெதுவாக தேய்த்து பூரியாக இட்டு கடாயில் எண்ணெயை காயவைத்து மிதமான தீயில் பூரிகளை பொரித்தெடுத்து பரிமாறவும்.