ஜிஎஸ்டி சோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.. ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது
நீண்ட இழுபறிக்கு பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த மசோதா அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் (ஜிஎஸ்டி) வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் பல முறை நடத்தப்பட்டது.
ஏற்கனவே, கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, பல்வேறு திருத்தங்களுக்குப் பின், மீண்டும் கடந்த மார்ச் 29-ம் தேதி லோக்சபாவில் ஒப்புதல் பெற்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது, இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவுடன் இணைந்த 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் இந்த மசோதா அமலுக்கு வருகிறது.