3 ஆண்டுகளில் ரூ. 1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு:
இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்ததாவது: கடந்த 3 நிதி ஆண்டுகளில் 23,064 இடங்களில் நடந்த சோதனையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இதில், நேரடி மற்றும் மறைமுக வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மூலம் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பினாமி பரிவர்த்தனை:
மேலும், 240க்கும் அதிகமாக பினாமி பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் இதுவரை மூவாயிரத்து 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.