கொல்கத்தாவுடன் இன்று மோதல்: மலிங்கா வருகையால் பலம் பெறுமா மும்பை
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதா னத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோது கின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி முதல் ஆட்டத்தில் புனே அணியிடம் தோல்வி கண்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சற்று நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அதேவேளையில் கொல்கத்தா முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. அந்த அணி குஜராத் அணிக்கு எதிரான 184 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்து வெற்றி பெற்றது.
புனே அணிக்கு எதி ரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர்களின் தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் களமிறக்கப்படாமல் கிருனல் பாண்டியாவுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டது. ஆனால் அவர் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசி கட்டத்தில் வேறுவழி இல்லாமல் பொலார்டு கடைசி ஓவரை வீசும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஸ்மித் இரு சிக்ஸர்கள் விளாசி வெற்றியை தட்டிச்சென்றார்.
இன்றைய ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் களமிறங்குவார் என எதிர்பார்க் கப்படுகிறது. தேசிய அணிக்கான போட்டிகள் முடிவடைந்துள்ளதால் இலங்கையின் மலிங்கா, மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இத னால் பந்து வீச்சில் அந்த அணி கூடுதல் பலம் பெறக்கூடும். மலிங்கா களமிறங்கும் பட்சத்தில் டிம்சவுத்தி நீக்கப்படுவார். இதேபோல் மெக்லி னகனுக்கு பதிலாக ஜான்சன் இடம் பெற வாய்ப்புள்ளது.
இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா தொடக்க வீரரான கிறிஸ் லின், மும்பை பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். கிறிஸ் லின், குஜராத்துக்கு எதிரான ஆட் டத்தில் 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். இதேபோல் அந்த ஆட் டத்தில் 76 ரன்கள் சேர்த்த காம்பீரும் தொல்லை தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரேன் ஆகியோரை கொண்ட மூவர் கூட்டணி நெருக்கடி தரக்கூடும்.
அணிகள் விவரம்
மும்பை:
ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், அம் பாட்டி ராயுடு, சிம்மன்ஸ், குல்வத் ஹெஜ்ரோலியா, கரண் சர்மா, சவுரப் திவாரி, அசெலா குணரத்னே, மிட்செல் ஜான்சன், ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லீனஹன், ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாடு, வினய் குமார், கெய்ரோன் பொலார்டு, கிருனல் பாண்டியா, டிம் சவுத்தி, மலிங்கா, ஜகதீஷா சுஜித், நித்திஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஜித்தேஷ் சர்மா, தீபக் பூனியா.
கொல்கத்தா:
கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.