‘பல்பு’கள் உதிரி பாகங்கள் வாங்க… தடை:நிதி வழங்கியும் இருளில் கிராமங்கள்
தெருவிளக்குகள் பழுதாகிய நிலையில் அதற்குரிய ‘பல்பு’ மற்று உதிரி பாகங்கள் புதிதாக வாங்க கூடாது என கிராம ஊராட்சிகளுக்கு தடை விதித்துள்ளனர். மின்பயன்பாட்டை குறைக்க மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்த உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேனி மாவட்டத்தில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்த எர்த் அமைக்க சில ஆயிரம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஊராட்சிகளில் 50 சதவீத தெருவிளக்குகள் மட்டுமே எல்.இ.டி.,விளக்குளாக மாற்றப்பட்டன.
நிதிக்குழு நிதி பிடித்தம்: 50 சதவீத தெருவிளக்குகள் பழைய டியூப் லைட்டுகளாகவே உள்ளன. கிராம ஊராட்சிகளுக்குஅனுமதிக்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்தி நுாறு சதவீதம் தெருவிளக்குகளுக்குரிய தொகை பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் கிராம ஊராட்சிகளுக்கு வரவேண்டிய மாநில நிதிக்குழுமானியம் வரவில்லை.
பல்புகள் வாங்க கூடாது: ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படாத பழைய தெருவிளக்குள் பழுதானால், அதற்குரிய ‘பல்பு’கள் மற்றும் உதிரி பாகங்களை கடைகளில் வாங்க கூடாதுஎன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே எல்.இ.டி., விளக்குகளாக மாற்றிய போது, கழற்றி இருப்பு வைக்கப்பட்டுள்ள பழையதெருவிளக்கு உபகரணங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய வட்டாரங்களில் விசாரித்தபோது அமைக்கப்படாத தெருவிளக்குகளுக்குரிய கட்டணத்தை முன்கூட்டியே முன்பணமாக பெற்றுக் கொண்டனர். பணத்தை பெற்று பல மாதங்கள் ஆகியும் எல்இடி விளக்குள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் பழைய தெருவிளக்குகளுக்கு உதிரி பாகங்கள் மற்றும் ‘பல்’புகள் வாங்க கூடாது என்பது கேலிக்கூத்தாகும்’ என்றனர்.
இருளில் முழ்கும் அவலம்:பலகிராமங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதடையும் பட்சத்தில் இருளில் இருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது . கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் இதில் கவனம் செலுத்தி மீதமுள்ள பகுதிகளிலும் புதியஎல்இடி விளக்குகளை பொருத்தவும், பழைய விளக்குகளில்பழுதேற்படும் போது, கடைகளில் கொள்முதல் செய்து கொள்ளவும்அனுமதிக்க வேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் கோருகின்றனர்.