மது விற்பனைக்கு தடை எதிரொலி: கிளப்கள், ஹோட்டல்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மது விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதை எதிர்த்து தென் மாவட் டங்களில் செயல்படும் கிளப்கள், ஹோட்டல்கள் சார்பில் உயர் நீதி மன்ற கிளையில் ரிட் மனுக்கள் குவிந்து வருகின்றன.
தேசிய, மாநில நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டர் தூரத் தில் செயல்படும் அனைத்து மதுக் கடைகளையும், மதுபானக் கூடங் களையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து தமி ழகத்தில் மட்டும் நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டர் தொலை வில் செயல்பட்ட 2,800 டாஸ்மாக் மதுக் கடைகளும், ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கி வந்த 400 மது பானக் கூடங்களும் மூடப்பட்டன.
மதுக் கடைகள் மூடப்படுவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி சாலையாக மாற்றி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.
இதனிடையே தனியார் ஹோட் டல்கள், கிளப்களில் மது விற்பனை தடுக்கப்பட்டதை எதிர்த்து தென் மாவட்டங்களில் இருந்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் குவிந்து வருகின்றன. ஏற்கெனவே கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் ஆகிய மாவட் டங்களில் இருந்து 22 கிளப்கள், 8 ஹோட்டல்கள் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தனித் தனி யாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஏப்.18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஹோட் டல்கள், கிளப்கள் சார்பிலும் தனித் தனியாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
இது தொடர்பாக வழக்கறிஞர் டி.பாஸ்யம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தனியார் கிளப்களுக்கு பொருந்தாது. ஏனெ னில் கிளப்களில் உறுப்பினர் களுக்கு மட்டுமே மது விற்கப் படுகிறது. வெளியாட்களுக்கு மது விற்பதில்லை. ஹோட்டல்களைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பொருந்தும் என்றாலும், ஹோட்டல்களில் மதுக் கூடங்கள் உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய் துள்ள குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தர விட்ட உடனே, அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கூட ஆலோசனை பெறாமல் கிளப்கள், ஹோட்டல்களி லும் மது விற்பனைக்கு தடை விதித்து மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடுவதை எதிர்க்க வில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தாத நிலையில் கிளப்புகளில் மது விற்பனைக்கு தடை விதிப்பதை ஏற்க முடி யாது. நெடுஞ்சாலைகளில் செல் வோருக்கு மது கிடைப்பற்கான வாய்ப்பை குறைக்கும் நோக்கத் தில்தான் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவ தற்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.