பள்ளிப்பருவ காதல் 64 ஆண்டுகளில் கனிந்தது
அமெரிக்காவில் பள்ளிப்பருவக் காதலர்கள், 64 ஆண்டுகள் கடந்து திருமணம் செய்து கொண்டனர்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஜேம்ஸ் பவ்மேன். 1952ல் பள்ளியில் படிக்கும் போது ஜாய்ஸ் கேவொர்கியான் என்பவரை காதலித்தார்.பள்ளிபடிப்பு முடிந்த பின்னர் காதலர்கள் பிரிந்தனர். வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டனர்.தற்போது இருவருக்கும் 81 வயதாகிறது. இடையிடையே பள்ளித் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 4 தடவை தான் சந்தித்துள்ளனர். ஜேம்ஸ் மனைவி தற்போது இறந்துவிட்டார், அதே போல ஜாய்ஸின் கணவரும் இறந்து விட்டார்.இதனிடையில் ஜேம்சும் ஜாய்ஸும் பழைய பள்ளி தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்தனர். தங்களின் பசுமைகால காதல் பற்றி மனம் விட்டு பேசினர். ஒருவர் மீது ஒருவருக்கு இன்னும் காதல் இருப்பதையும் உணர்ந்து கொண்டனர்.இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, தங்களின் பேரக்குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். எங்கள் வாழ்க்கையில் இது நெகிழ்ச்சியான தருணம் என ஜேம்ஸ், ஜாய்ஸ் கூறியுள்ளனர்