பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டி: இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி
பெண்களுக்கான உலக லீக் ஹாக்கி போட்டியின் 2-வது சுற்றின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது.
கனடாவில் உள்ள வெஸ்ட் வான்கூவர் நகரில் பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர்த்து ஆடியது.
ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் சிலி வீராங்கனையான மரியா மால்டொனாடோ, கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலையை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து சிலியின் முன்னிலையைக் குறைக்க இந்திய வீராங்கனைகள் கடுமையாக போராடினார்கள். இதன் விளைவாக ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அனுபா பர்லா அடித்த கோலின் மூலம் இந்திய அணி ஆட்டத்தை சமன் செய்தது.
அதன்பிறகு சிலி அணி இந்திய கோல் எல்லையில் தீவிர தாக்கு தல்களை நடத்தியது. ஆனால் இந்தியாவின் தற்காப்பு ஆட்டக் காரர்களும், கோல்கீப்பரான சவிதாவும் அவர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளை முறியடித் தனர். இந்திய அணி தற்காப்பு ஆட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட தால், கோல் அடிக்க முடிய வில்லை. இதனால் ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து பெனாலிடி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.
இதில் இந்தியாவின் ராணியும், மோனிகாவும் கோல்களை அடித்தனர். ஆனால் சிலி வீராங் கனைகளின் கோல் அடிக்கும் முயற்சிகளை இந்திய கோல் கீப்பர் சவிதா முறியடித்தார். இதனால் டைபிரேக்கரில் 2-0 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து உலக லீக் சுற்றின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த தொடரின் சிறந்த கோல்கீப்பராக இந்தியாவின் சவிதா தேர்ந் தெடுக்கப்பட்டார்.