Breaking News
மல்யுத்த வீரர்களின் தரவரிசை: சாக்‌ஷி மாலிக் முன்னேற்றம்

மல்யுத்த வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், சந்தீப் தோமர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள் ளனர்.

உலக மல்யுத்த கூட்டமைப்பு, மல்யுத்த வீரர்களுக்கான தரவரி சைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான 58 கிலோ கிராம் பிரிவு ப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பிரிவில் ஜப்பான் வீராங்கனையான கோரி இசோ முதல் இடத்தில் உள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் தனது தொடர் வெற்றி களின் மூலம் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தரவரிசைப் பட்டியலில் ஆண் களுக்கான 57 கிலோ கிராம் ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் தோமர் 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பிரிவில் ஜார்ஜியாவின் விளாடிமிர் கின்செகாஷ்விலி முதல் இடத்தில் இருக்கிறார்.

சாக்‌ஷி மாலிக், சந்தீப் தோமர் ஆகிய இருவரும் தற்போது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.