கோயம்பேடு-நேரு பூங்கா இடையே ஒரு வாரத்தில் ரயில்: 2 நாள் ஆய்வை அதிகாரிகள் தொடங்கினர்
சென்னை கோயம்பேடு-நேரு பூங்கா இடையே விரைவில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கவுள்ளது. இப்பாதையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை உள்ள 8 கி.மீ. தூரம் முழுவதும் சுரங்கப்பாதையில் ரயில் இயக்கப்படவுள்ளது. சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வை பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தொடங்கியுள்ளார். குறிப்பாக சுரங்கப்பாதையில் மேற்கூரையின் உறுதி, மின்சாரம், காற்றோட்டம் உள்ளிட்டவற்றை அவர் பரிசோதித்து வருகிறார்.
சோதனை ஓட்டம் திருப்தி அளித்தால் மத்திய, மாநில அரசுகளுடன் பேசி பயணிகள் பயன்பாட்டுக்காக ரயில் சேவை தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும். அநேகமாக ஒரு வாரத்திற்குள் சுரங்கப்பாதையில் ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மெட்ரோ ரயில் இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், மண்ணின் உறுதித்தன்மை இல்லாததே இதற்கு காரணம் என்றார்.