தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அந்தமான்-இலங்கை இடையே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: அந்தமான்-இலங்கை இடையே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சி நோக்கி நகர்வதால் வடக்கு நோக்கி நகர்வதால் மியான்மர், வங்கதேசத்திற்கு நகர்வதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.