உலகம் முழுதும் உள்ள அணு உலைகளை பயங்கரவாதிகள் தாக்கலாம்: மத்திய அரசு தகவல்
உலகம் முழுதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு சைபர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கவலை வெளியிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமை கவலை வெளியிட்டுள்ள தகவல் உண்மையா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ஆம்” என்றதோடு நாட்டில் உள்ள “அணுசக்தி நிர்மாணங்கள் பாதுகாப்பு பற்றிய ஆழமான கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதாவது சர்வதேச அணுசக்தி முகமை இதற்காக குறிப்பிட்ட ஆதாரங்கள் எதையும் கூறவில்லை, ஆனால் பொதுப்படையாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டதாக அவர் தெரிவித்தார்
“இத்தகைய கவலைகளை, எச்சரிக்கைகளை அரசு பொறுப்புணர்வுடன் அணுகுகிறது, எனவே இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. மேலும் இந்திய அணு உலை அமைப்புகளின் முக்கியமான உள்கட்டமைப்புகள் இணையதள அணுக்கத்திலிருந்து தனித்து பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கணினி மற்றும் தகவல் பாதுகாப்பு ஆலோசனை குழுவும், கட்டுப்பாட்டு பாதுகாப்புப் பணிக்குழுவும் அணு மின் நிலையங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார்