ஜாதவ் மரண தண்டனை பற்றி கருத்து கூற ஐ.நா. சபை மறுப்பு
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது பற்றி கருத்து கூற ஐ.நா. சபை மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப் பட்டார். இந்திய அரசின் சார்பில் உளவு பார்க்கவே பாகிஸ்தான் வந்ததாகவும் கராச்சி குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக வும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசா ரித்த பாகிஸ்தான் ராணுவ நீதி மன்றம் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் செய்தியாளர் களைச் சந்தித்த ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து கருத்து கூறும் நிலையில் நாங்கள் இல்லை” என்றார்.
இந்த விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவது பற்றிய கேள்விக்கு அவர் கூறும்போது, “இரு நாடு களுக்கும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றார்.