அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு: அம்பேத்கர் விழாவில் பிரதமர் மோடி உறுதி
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட நாக்பூர் வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டு நலப்பணிகளையும் தொடங்கிவைத்தார்.
விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 2022ல் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஒவ்வொரு இந்தியரும் வீடு பெற்றிருக்கவேண்டும். இந்த இலக்கை நோக்கியே அரசு தனது பணிகளை ஆற்றிவருகிறது என்றார். சுதந்திரத்திற்குப் போராடிய விடுதலை வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நாட்டு மக்கள் போராட வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வீடுகளைப் பெற்றிருக்கவேண்டும்.
நாம் 2022க்காக ஒரு கனவு காணுவோம். மிகவும் ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு என்று வசிக்க ஒரு சொந்தவீடு இருக்கவேண்டும். அந்த வீட்டில் மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற வசதிகள் பொருத்தப்பட வேண்டும். அவர்களின் வீட்டருகே மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் அமைந்திருக்க வேண்டும்.
1891 ஏப்ரல் 14ல் பிறந்த அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மை கட்டுமான கலைஞராகத் திகழும் அம்பேத்கர், தலித்துகள், பெண்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் உயர்வுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அம்பேத்கர் மறைவுக்குப் பின், 1990ல் இந்திய அரசின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது. பாபா சாஹேப் அம்பேத்கர் தனது வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொண்ட போதிலும் அவரிடம் சிறு கசப்போ அல்லது பழிவாங்கும் எண்ணத்தின் ஒரு சுவடையும் காணமுடியாது என்றார்.
இன்று நாக்பூருக்கு வருகை தந்த பிரதமர் முழுநாளை ஒதுக்கி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இன்று காலையிலேயே நாக்பூருக்கு வந்துசேர்ந்த பிரதமர் மோடி, 1956 அக்டோபர் 14 அன்று அம்பேத்கரும் தன்னைப் பின்பற்றிய 600,000 பேரையும் புத்தமதத்தைத் தழுவிய வரலாற்று சிறப்பு மிக்க தீக்ஷாபூமியைப் பார்வையிட்டு அம்பேத்கர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தனது நாளை தொடங்கினார்.
இந்த இடம்தான் 61 ஆண்டுகளுக்குமுன், வரலாற்றிலேயே ஒரு தனி இடத்தில் மட்டுமே மிகப்பெரிய மக்கள் திரள் மதமாற்றம் நடைபெற்ற இடமாக ‘தர்மாந்தர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
விழாவில், மத்திய அமைச்சர் அதவாலே மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் ஆகியோர் பிரதமர் மோடியுடன் உடன் இணைந்து ஆளுயர மலர்மாலையை பெரிய மார்பளவு பாபாசாஹேப் அம்பேத்கர் சிலைக்கு அணிவித்தனர்.