Breaking News
நெத்திலி மீன் தொக்கு

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் – 300 கிராம்
எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
புளி கரைசல் – தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது

அரைக்க…

சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
மிளகு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2

எப்படிச் செய்வது?

நெத்திலி மீனை எடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். ஒரு ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மிளகு எடுத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும். பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இப்போது புளி கரைசலை ஊற்றி நெத்திலி மீனை சேர்த்து மூடி வேக விடவும். பின் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும். சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.