ஓபிசி மசோதாவை எதிர்ப்பதா? – ஒடிசாவில் பாஜக செயற்குழு கூட்டம் முடிந்தது: எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் (2 நாட்கள்) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இறுதி நாளான நேற்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்குவது தொடர்பான புதிய மசோதா மீது விவாதம் நடை பெற்றது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “முஸ்லிம் சமுதாயத்தில் பின் தங்கியவர்களையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டியது அவசியம்” என்றார்.
அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, “இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சுமார் 30 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த காங்கிரஸ் கட்சி, வாக்கு வங்கி அரசியல் காரணமாக அதைச் செய்யவில்லை. இதை யடுத்து இந்த மசோதா நாடாளு மன்ற நிலைக்குழுவின் பரிசீல னைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. இது துரதிருஷ்டவச மானது” என்றார்.
1993-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, இப்போது செயல் பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்தைக் கலைத்து விட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறை வேறியது. ஆனால் மாநிலங் களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் உள்ளது. இங்கு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா மூலம் எந்த ஒரு சமுதாயத்தினரையும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கோயிலில் மோடி வழிபாடு
புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜ் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். கோயிலுக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, மலர்கள், பால், இளநீர் மற்றும் இனிப்புகளுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தியதாக கோயில் குருக்கள் தெரிவித்தார். கோயிலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கான பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
முன்னதாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
2019-லும் மோடி பிரதமர்
பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத் தில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, சுகாதார கொள்கை, முத்ரா கடன் மற்றும் ஜன்தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பிரதமர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்திய தேர்தல் இதை உறுதிப் படுத்தி உள்ளது.
இத்தகைய வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்கள் தொடர வேண்டு மானால் 2019 மக்களவைத் தேர்தலிலும் மோடியை பிரதம ராக்க நாட்டு மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.