தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள்: கடற்படைக்கு முதல்வர் வேண்டுகோள்
தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண் டும் என இந்திய கடற்படைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத் துள்ளார்.
இந்தியக் கடற்படையில் ‘ஐஎன்எஸ் சென்னை’ என்ற நவீன ரக போர்க் கப்பல் கடந்த 2016 நவம்பர் 21-ம் தேதி சேர்க்கப்பட்டது. இது கடந்த 15-ம் தேதி சென்னை வந்தது. அந்த கப்பலை சென்னை மாநகரத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கப்பலை அர்ப்பணித்து வைத்து பேசும்போது, “இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள் இயற்கை சீற்றங்களின்போது தமிழகத்துக்கு உதவியுள்ளன. இதேபோன்று, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களையும் தாக்குதல் களில் இருந்து பாதுகாக்க வேண் டும். அப்போதுதான் அவர்கள் தங்களின் பாரம்பரிய தொழிலை அமைதியான முறையில் மேற் கொள்ள முடியும்” என்றார்.
பின்னர், கிழக்கு பிராந்திய கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் எச்சிஎஸ் பிஸ்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகமாக விசாகப்பட்டினம் விளங்கி வருகிறது. கிழக்கு பிராந்திய கடற்படையின் செயல் பாடுகள் அங்கிருந்து நடைபெற்று வருகின்றன.
சென்னையில் கடற்படை தளம்
கடற்படை விரிவாக்கம் செய்யப் பட்டு வருவதால், அவற்றின் செயல்பாடுகளுக்கான மாற்று தளங்களை அமைக்க வேண்டியுள் ளது. சென்னையிலும் அப்படிப்பட்ட ஒரு கடற்படை தளத்தை அமைக்க தேவையான அம்சங்கள் உள்ளன. அதற்கு தேவையான நிலத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா, தமிழகம், புதுவைக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், காமராஜ், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர ஆணையர் கரன் சின்ஹா, கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநக ராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
ஊடகங்கள் மூலம் ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலின் வருகையை அறிந்து, அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று பொதுமக்கள் பலர் நேப்பியர் பாலம் அருகில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பாதையில் குவிந்தனர். ஆனால், பொதுமக்கள் கப்பலை பார்க்க அதிகாரிகள் நேற்று அனுமதிக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் அங்கிருந்த கடற் படை ஊழியர்களிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து பொது மக்களை கலைந்து போகச் செய்தனர்.