Breaking News
யுவன் தயாரிப்பில் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி இணையும் ‘மாமனிதன்’

மீண்டும் விஜய் சேதுபதி நாயகனாக்கி ‘மாமனிதன்’ படத்தை இயக்கவுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தை யுவன் தயாரிக்கவுள்ளார்.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் மூலம் இணைந்து பணியாற்றிய இணை சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி. தற்போது 4-வது முறையாக மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு ‘மாமனிதன்’ என்ற கதையை எழுதத் தொடங்கினார் சீனு ராமசாமி. பல்வேறு முன்னணி நடிகர்களிடம் அக்கதையைத் தெரிவித்தார். ஆனால், படம் தள்ளிக் கொண்டே சென்றது. இறுதியாக விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கவே, நடிப்பதாக உறுதியளித்தார்.

இக்கூட்டணி இணைப்பில் உருவாகும் ‘மாமனிதன்’ படத்தை தயாரிக்கவுள்ளார் இசையமைப்பாளர் யுவன். ஏற்கனவே நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை தயாரித்து வருகிறார் யுவன்.

தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சீனு ராமசாமி. முழுமையாக முடித்தவுடன் நாயகி மற்றும் இதர நடிகர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.