ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும்ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதரா பாத் அணி, டெல்லி டேர்டேவில்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஹைதராபாத் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. அதேவேளையில் டெல்லி 4 ஆட்டத்தில் தலா 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய் துள்ளது. ஹைதராபாத் அணி கடைசி ஆட்டத் தில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தியிருந்தது. மாறாக டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் கடைசி ஓவரில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டிருந்தது.
6 புள்ளிகளுடன் பட்டியலில் ஹைதரா பாத் அணி 3-வது இடத்திலும், டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன. டெல்லி அணியில் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் அதிரடியில் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் சேம் பில்லிங்ஸ், கோரே ஆண்டர்சன், கிறிஸ்மோரிஸ் ஆகியோரும் அதிரடி வீரர்களாக உள்ளனர்.
எனினும் இவர்களிடம் இருந்து தொடர்ச்சி யாக ரன்குவிப்பு வெளிப்படாதது பின்னடை வாக உள்ளது. தொடரின் தொடக்கத்தில் சதம் அடித்த சஞ்சு சாம்சனிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான ரன் குவிப்பு இல்லாமல் போனது. மேலும் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்கள் வீழ்ந்துவிட் டால் கடைசி கட்டத்தில் அணியின் ரன் குவிப்பு மந்தமாகி விடுகிறது. இந்த விஷயத் தில் டெல்லி அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
பந்து வீச்சில் ஜாகீர்கான் தனது அனுபவத் தால் பலம் சேர்க்கிறார். கிறிஸ் மோரிஸ், கோரே ஆண்டர்சன், ஷபாஷ் நதீம், பாட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா ஆகியோரும் நம் பிக்கை அளிக்கின்றனர்.
ஹைதராபாத் அணியில் கேப்டன் வார்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்தவாறு அதிரடியா கவோ, நிதானமாகவோ செயல்பட்டு அணியை முன்னெடுத்துச் செல் கிறார். 5 ஆட்டங்களில் 235 ரன்கள் சேர்த்து ரன்குவிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆன யுவராஜ் சிங், சொந்த மைதானத்தில் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என கருதப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த புவனேஷ்வர் குமார் அணிக்கு பலம் சேர்க்கிறார்.
இந்த சீசனில் 15 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள அவர் கடைசிகட்ட ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்த வராக உள்ளார். கடந்த ஆட்டத்தில் பரிந்தர் ஸ்ரண் 2 ஓவர்களில் 29 ரன்களை தாரை வார்த்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்பட்டு ஆசிஷ் நெஹ்ரா சேர்க்கப்படக்கூடும்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் டெல்லி பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.