நடிகர் தனுஷ் வழக்கில் இன்று தீர்ப்பு
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மேலூர் தம்பதியர் உரிமைகோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தனுஷ் தங்கள் மூத்த மகன் எனவும், அவர் மாதம் 65 ஆயிரம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனுசின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று அறிவிக்க உள்ளது.