யோகியின் அடுத்த அதிரடி அகிலேஷ், மாயாவதி பாதுகாப்பு குறைப்பு
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அதிரடியாக குறைத்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று நடந்த பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 151 ேபர் விஐபிக்கள் அளவிலான பாதுகாப்பை பெற்று இருந்தனர். இதில், முன்னாள் முதல்வர்கள், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ், மாயாவதி, சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ், சிவ்பால் யாதவ், அசம் கான் உள்பட 46 பேரின் பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜின் தேசிய பொது செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உள்ளிட்ட 105 பேரின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேசமயம், சிலருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜ தலைவர் வினய் கத்தியார் `இசட்’ பிரிவு பாதுகாப்பு பெற்றுள்ளார்.