தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக டில்லி போலீசார் இன்று (ஏப்ரல் 27) சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னை விரையும் டில்லி போலீஸ் :
இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தினகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டில்லி போலீசாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் தினகரின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் தினகரனை அழைத்துக் கொண்டு டில்லி போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.