மாநில மகளிர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த இளம்பெண் சாம்பியன்
தமிழ்நாடு மாநில 45-வது மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆர்.திவ்யலட்சுமி சாம்பியன் பட்டம் வென்றார்.
திருவாரூரில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்த இப்போட்டியில் திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆர்.திவ்யலட்சுமி 7.5 புள்ளி களுடன் முதலிடம் பெற்று சாம்பி யன்ஷிப் பட்டத்தை வென்றார்.
மேலும், சென்னை பாலகண் ணம்மா, வி.ரிந்தியா, ஈரோடு அபிராம நிதி, சென்னை சரண்யா ஆகியோர் முறையே 2, 3, 4, 5-ம் இடங்களைப் பெற்றனர். இப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்றவர்கள் ஜூலை மாதம் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொள்ள உள்ளனர்.
போட்டியில் வெற்றிபெற்றவர் களுக்கான பரிசளிப்பு விழா திருவாரூரில் நேற்று நடைபெற்றது. விஜயபுரம் வர்த்தக சங்கத் தலைவர் சி.பாலமுருகன் தலைமை வகித்தார். கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு சதுரங்கக் கழக மாநில இணைச் செயலாளர் ஆர்.கே.பாலகுணசேகரன் வரவேற் றார். ரோட்டரி பிரமுகர் முரளிதரன் நன்றி கூறினார்.