மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை தத்தெடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்
நக்சல் தாக்குதல் மற்றும் பயங்கரவாத தாக்குதலின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை தத்தெடுக்க ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ராணுவம், பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளில் பணியாற்றி உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கழகம் திட்டமிட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, அவர்களின் குடும்பத்தினர் வருமான பெறுவதற்கு உதவி போன்றவற்றை செய்யவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 2012 – 2015 ஆண்டு பேட்சை சேர்ந்த 600 முதல் 700 இளம் ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் பணி செய்யும் பகுதியில் உள்ள, குறைந்தபட்சம் ஒரு வீரரின் குடும்பத்தை தத்தெடுக்க உள்ளனர். இந்த அதிகாரிகள் அந்த வீரர்களின் குடும்பத்தை அணுகி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் உள்ளிட்ட நிலுவை தொகைகளை பெற்று தர உள்ளனர்.